காதல் மனைவி இறந்த துயரம்.! உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த கணவர்.!
Husband sets himself on fire in grief of his wife death in sivagangai
சிவகங்கை மாவட்டத்தில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் பிரியங்கா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மணிகண்டன் ஆவரங்குடி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் மனைவி இறந்த துயரத்தில் சருகணி அருகே உள்ள திராணி காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Husband sets himself on fire in grief of his wife death in sivagangai