குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி.. வழிகள் பல இருக்க விதியை முடித்து கொண்ட சோகம்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், நெய்வேலி 21-வது வட்டம் நாவலர் தெருவில் வசித்து வருபவர் ரஜினி முருகன் (வயது 49). இவரது மனைவி சாந்தி(35). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டு காலம் முடிந்தும், இவர்களுக்கு குழந்தை இல்லாத குறையில் தவித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் ரஜினி முருகன், நெய்வேலி 7-வது வட்டத்தில் இருக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். 

Image result for suicide seithipunal

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாதது குறித்து கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ரஜினி முருகனுக்கும், சாந்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சாந்தி சடலமாக கிடந்தார். 

பின்னர், வீட்டின் மற்றொரு அறையில் ரஜினி முருகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர் ஒருவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் லதா, துணை காவல்ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தொங்கிய ரஜினி முருகன் உடலை மீட்டனர்.

பெற்றோர்கள் இல்லாமல், குழந்தைகள் காப்பகத்தில் எத்தனையோ குழந்தைகள் தவித்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தை இல்லை என்பதற்காக விதியை முடித்து கொள்வது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும். இந்த நவீன காலத்தில், குழந்தை இல்லை என்றால் அதற்கான சிகிச்சை முறை பல இருக்கிறது, அதன்முலம் குழந்தை பெற்று கொள்ள முடியவில்லை என்றாலும், ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பு மகனாக எடுத்து வாழ்கை தருவதும் சிறந்த முடிவு தான், இதனை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறான முடிவை தேடி கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife suicide in neyveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->