வீடியோ: தமிழக அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நடந்த கொடூரம்! இது அநியாயம், களத்தில் இறங்கிய ஆணையம்.!   - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் நோயாளி ஒருவரை மருத்துவ பணியாளர் வீல் சேரில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர முற்படுகையில், அவர் அதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், காலதாமதம் ஆனதை உணர்ந்த மருத்துவப் பணியாளர் அவர் மீது கோபம் கொண்டு, அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டார்.  

இந்த நோயாளி சிறுநீரக பாதிப்புக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் வீல் சேரில் அமர முடியவில்லை என கூறியதை அடுத்து மருத்துவ பணியாளர் கீழே தள்ளி விட்டுள்ளார். 

இந்த விவகாரம் தற்போது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதங்களில் வைரலாகி. அந்த அரசு ஊழியருக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.

இதனிடையே, இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human rights commission case filed for wheel chair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->