சட்டம் அறிவோம்: குற்றம் செய்த நபரை கைது செய்ய நடவடிக்கை எப்படி?..! - Seithipunal
Seithipunal


நமது இந்திய திருநாட்டில் பல விதமான சட்டங்கள் உள்ளது. பொதுவாக நாம் திரைப்படங்களை பார்க்கையில் காவல் துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் நபர், தவறு செய்யும் நபர்களை கைது செய்ய குறிப்பிட்ட சட்டத்தை தனது வசன பாணியில் சொல்லி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று செல்வார். இதே சட்டங்கள் வழக்கறிஞரிடம் கேட்டால், இதனைப்போன்ற பல சட்டங்கள் நமது நாட்டில் உள்ளது என்று கூறுவார். அந்த வகையில், இன்று ஒரு சட்டம் குறித்து நாம் அறிவோம்.

குறித்த நபர் செய்த குற்றத்திற்கு அவரை கைது செய்ய வேண்டுமா?.. பொதுவாக எந்த நபரையும் குற்றம் குறித்த வழக்குகள் கட்டாயம் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம்  

குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் கொடிய குற்றம் செய்யும் பட்சத்தில், இக்கொடிய குற்றத்தை மீண்டும் செய்திருப்பின், குற்றவாளிக்கு எதிராக உள்ள சாட்சிகளை கலைப்பதாக கருதினால் அல்லது அவர் தலைமறைவாகலாம் என்ற பட்சத்தில் குற்றவாளியை கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஜோகேந்தர் குமார் (1994 – 1 LW Crl 370) என்ற வழக்கில் கூறியுள்ளது.

இதில் பிடியாணை வேண்டாம் என்ற குற்றத்தின் கீழ், குறித்த நபரின் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை பெற்ற காவல் நிலைய அதிகாரி, குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, கைது செய்வதற்குரிய குற்றம் என்ற பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து (முதல் தகவல் அறிக்கை - FIR) உடனடி கைது நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை, பிணையில் (ஜாமின்) விடுதலை செய்யாமல், சிறையில் அடைக்கவும் அதிகாரம் உண்டு. பிணைவிடும் குற்றம் என்ற பட்சத்தில், காவல் துறை அதிகாரி நீதிமன்றத்தில் குறித்த நபரை சமர்ப்பித்து இருக்க வேண்டும்.

பிடியாணை வேண்டும் என்ற குற்றத்தின் கீழ், நீதிபதியின் ஆணையின்றி யாரையும் கைது செய்தல் அல்லது விசாரணை செய்ய காவல் அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. பிடியாணையை பெற முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், காவல் அதிகாரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அல்லது நீதிபதியின் கவனத்திற்கு எடுத்து சென்று பிடியாணைக்கு ஒப்புதல் வாங்கி மேற்படி கைது அல்லது விசாரணை நடவடிக்கை எடுக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to arrest a person depend FIR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->