ஆ.ராசா தொகுதியில் கடையடைப்பு நடத்தும் இந்து முன்னணியினர்! - Seithipunal
Seithipunal


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்பின் செயலாளர் திவாகர் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்மையில் இந்து மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனத்திற்கு உள்ளானார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் ஆ.ராசாவின் சொந்தத் தொகுதியான நீலகிரியில் கடை அடைப்பு நடத்த முடிவு செய்தனர். 

இது தொடர்பாக நீலகிரி தொகுதியில் முழுவதும் இந்து அமைப்பினர் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு நோட்டீஸ் விநியோகித்தனர். அதற்குப் போட்டியாக இந்து முன்னணியினர் போராட்டத்திற்கு ஆதரவு தரக்கூடாது என திமுகவை சேர்ந்தவர்களும் நோட்டீஸ் விநியோகித்தனர். 

இந்நிலையில் இன்று இந்து முன்னணியினர் அறிவித்த கடையடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

நீலகிரி தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடியுள்ளன.

சுற்றுலாத்தலமான ஊட்டியில் 50% கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் பகுதியிலும் கடைவீதிகள் மக்களை நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

போலீசார் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி அமைப்பின் செயலாளர் திவாகர் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu leaders who are holding shop in A Raja constituency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->