பதிவு செய்யாவிட்டாலும் முறைப்படி நடந்த திருமணம் செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "எனக்கு கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. 

என்னுடைய விருப்பம் இல்லாமல் நடந்த இந்த திருமணத்தை பதிவு செய்வதற்கு பதிவுத்துறை தலைவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, 

 

"கிறிஸ்துவ தேவாலயத்தில் எனது விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தாகவும், இந்த திருமணத்தை பதிவு செய்ய க்கூடாது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால், முறைப்படி திருமணம் நடைபெற்று, அதனை பதிவு செய்யாமல் இருந்தாலும், அந்த திருமணம் செல்லத்தக்கது தான். 

ஒருவரின் விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை, பதிவுத்துறையில் பதிவு செய்வதால் மட்டும் அஅதனுடைய புனிதம் கூடி விடாது. முறைப்படி திருமணம் நடைப்பெற்றால், அதை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துதான் ரத்து செய்ய முடியும். அதற்கு மாறாக திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட முடியாது. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court order formal marriage valid even if not registered


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->