ஒரே நாளில் வெளுத்து வாங்கிய மழை.! புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் மிக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல், சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. 

மேலும் சென்னையில் உள்ள எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பெசன்ட் நகர், அண்ணா நகர், வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. 

இதேபோல், சென்னையில் உள்ள புறநகர் பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த தொடர் மழையின்  காரணமாக சென்னையில் உள்ள புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 967 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாகவும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain puzhal aeri water leval increase


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->