தமிழகத்தை உலுக்கிய சம்பவம்... கே.ஜி.எஃப்.,ல் சிக்கிய "ஹரியானா ஆரிப்".. தனிப்படையினர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே இரவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் ரூ. 75 லட்சம் வரை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து 7 தனி படைகளை அமைத்த போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தை போன்று இந்தியா முழுவதும் கொள்ளை சம்பவங்களில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்று விட்டு கொள்ளையர்கள் ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் தப்பி சென்று இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை பிடித்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்தது அடுத்து சந்தேகிக்கப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கொள்ளையர்களின் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதாக தனி படையினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் பதிவான செல்போன் சிக்னலை ஆதாரமாக வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது கேஜிஎஃப் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் கேஜிஎஃப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதை உறுதி செய்த தனிப்படையினர் விடுதியில் சோதனை செய்த பொழுது அந்த நபர் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து விடுதியில் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் தனிப்படை போலீஸ் சார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொள்ளையில் தொடர்புடைய நபரை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஆரிப் என்பது தெரியவந்தது. 

கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஆரிப் தற்பொழுது திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் விடுதியில் உரிமையாளர் மற்றும் மேலாளரை கைது செய்த போலீசார் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்களா என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana youth arrested in KGF in thiruvannamalai ATM robbery incident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->