குட்கா தடை வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடைவிதித்த உணவுபாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் குட்கா புகையிலை தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் கடந்த வாரம் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது, குட்கா விவரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தடை சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

குட்கா நிறுவனங்களின் தரப்பில், தமிழக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், குட்கா, புகையிலை பொருட்களை யாரும் உணவாக உண்ணுவதில்லை. அதனை மென்று துப்பி விடுவார்கள் என்று வாதிடப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gutka case SC order 25042023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->