பணத்தை தர ஒப்புக்கொண்ட பன்னீர்செல்வம் - கட்டாயப்படுத்திய விஜயலட்சுமி : கோவையில் வசமாக சிக்கிய பரபரப்பு பின்னணி.! - Seithipunal
Seithipunal


கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் பன்னீர் செல்வம் என்பவர் தெய்வம் காளிபிரேஷன் அக்கியூரசி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இச்சூழலில் பாப்பம்பட்டி, சூலூர் போன்றபகுதிகளுக்கு ஆய்வு செய்ய போகும் தொழிலாளர் துணை ஆய்வாளர் விஜயலட்சுமி (57), பன்னீர்செல்வம் அலுவலகத்திலும் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு விஜயலட்சுமிஆய்வு மேற்கொள்ள வரும்பொழுதெல்லாம் பன்னீர்செல்வத்திடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆய்வு செய்த விஜயலட்சுமி, லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தியதால், பணத்தை தர ஒப்புக்கொண்டார்.

அதேநேரம், லஞ்சம் தர விருப்பம் இல்லாத பன்னீர்செல்வம், இந்த விவரம் தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில்,லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தனர்.

இதன்பின், அந்த நிறுவனத்திற்குவந்த தொழிலாளர் துணை அலுவலர் விஜயலட்சுமியிடம்ரூ.11,200 ரசாயனம் தடவிய பணத்தை அளித்துள்ளார்.

அதை விஜயலட்சுமி வாங்கியதையடுத்து அங்குமறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

English Summary

govt officer arrested coimbatore


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal