கடலில் பேனா சின்னம் அமைக்க நிதி இருக்கு.! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்க நிதி இல்லையா? - டிடிவி தினகரன் ட்வீட் - Seithipunal
Seithipunal


தற்போது, தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு 10 % மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்க தல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. 

கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை தி.மு.க அரசு எடுத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. கடலுக்குள் பேனா வைக்க தி.மு.க அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt employees deepavali bonas ttv dinakaran tweet


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->