இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் வளர்ச்சி.!! - ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் "இன்று தமிழ்நாடு என்று சொல்லும் இந்த பகுதி புனிதமான ஒரு இடம். மனித நேயத்திற்காக ராகவேந்திரா வாழ்ந்தார். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி இருந்தனர். சனாதன தர்மம் துவங்கவும் பாரத் என்ற நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி உள்ளது. இந்தியா என்பதற்கு தான் அறிமுகம் தேவை, ஆனால் பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை.

ஆங்கிலேயர்கள் பெயர் வைத்ததால் தான் இந்தியா என்ற பெயர் உருவானது. அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் "INDIA IS BHARAT" என கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மம் தீண்டாமை மற்றும் பாகுபாடை வலியுறுத்துகிறது என பலர் பிரச்சாரம் செய்கின்றனர். சனாதன தர்மம் மனிதர்கள் இடையே தீண்டாமையை ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

இந்தியா 1947ம் ஆண்டு உருவானது என பலர் நினைப்பது மிகவும் நகைச்சுவையான ஒன்று. இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ கூறியுள்ளார். சனாதனதர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர். 10 ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தில் இந்த வாழ்க்கை முறை தான் இருந்து வருகிறது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு வாழ்க்கை முறை இல்லை. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை.

மடங்களில் கடவுளை வழிபடுவது மட்டுமே கல்வியாக கற்பிக்கப்படுகிறது என பலர் நினைக்கின்றனர். மடங்களில் கடவுளை வணங்குவது என்பது ஒரு வேளை. கல்வி, மக்கள் சேவை, பொது சேவை என அனைத்தையும் மடங்கள் கற்பித்து வந்தன. இதனை நாம் இழந்த பின்புதான் அனைத்தையும் அரசிடம் எதிர்பார்த்து வருகிறோம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பல சேதங்களை உருவாக்கினர். இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் பொருள் அளவில் மட்டும் இருக்க கூடாது. அறிவியல் ரீதியாகவும், பொருளாதார அளவிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கி வருகின்றனர். உலகம் முழுவதும் பல பிரச்சினைகள் தற்போது எழுந்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இந்தியாவில் உள்ளது. அதற்கு இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். பாரத் என்றால் என்ன என புரிந்து கொண்டுள்ள நபர் பிரதமர் நரேந்திர மோடி. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதான தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இதனை ஏற்கவில்லை என கூறும் நபர்களும் இதில் பயணம் செய்வார்கள்" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RNRavi said growth of India is growth of spirituality


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->