கொரோனாவில் இறந்த மருத்துவ பணியாளர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தவர் மு.க. ஸ்டாலின். 

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இதே போன்று அரசு பணியில் இருக்கும்போது இறந்தவர்களுக்கு, அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணையின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. 

கொரோனா தொற்று அதிகமாக இருந்த கால கட்டத்தில், தங்கள் உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல் பொதுமக்களுக்காக சேவை செய்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு இறந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

கோரோனா தொற்றால் உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

ஆனால் இது நாள் வரை, அந்த பணி வழங்கப்படவில்லை. கொரோனா கால கட்டத்தில் தங்களது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்காக இந்த விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. 

கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது தொடர்பான நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும்'' என தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government provide medical worker died in Covid


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->