மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்...! மாத்திரையால் நடந்த விபரீதம்..!  - Seithipunal
Seithipunal


திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சென்ற 16ஆம் தேதி 35 வயது பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காய்ச்சலுக்காக மருத்துவரை பார்க்க சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவ பெண்ணின் உடலில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கிறது எனக் கூறி மாத்திரை கொடுத்துள்ளார். அந்த மாத்திரை வாங்கிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற பெண் மாத்திரை சாப்பிட்டார். அதன் பின் அவருக்கு காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான வயிற்றுவலியும் உண்டானது. 

இதன் காரணாமாக, மீண்டும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு இருந்த செவிலியரிடம் நடந்ததை கூறி அவர் மாத்திரையை வாங்கி பார்த்தார். அப்போதுதான் அது காலாவதியான மாத்திரை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் வேறு புதிய மாத்திரைகளை கொடுத்தனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அங்கிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், இது குறித்து விளக்கமளித்துள்ள அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர், காலாவதியான மாத்திரை 5 அட்டைகள் இருப்பில் இருந்திருக்கிறது. இதில் ஒரு அட்டை அந்த பெண்ணுக்கு தரப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது அந்த மாத்திரைகள் அழிக்கப்பட்டு விட்டது. மேலும், இதுபோன்ற தவறு நடக்காது என்றார். இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital provide expired tablet to women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->