தமிழக ஆளுநரின் வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநருக்கு முறையான, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படாததற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்  என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்று தமிழக ஆளுநர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டபோது நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஏற்புடையதல்ல. 

குறிப்பாக ஆளுநர் அவர்கள் செல்லும் பாதையில் கருப்புக் கொடி காட்ட ஒரு கூட்டம் தயாராக இருப்பது தெரிந்தும், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பில் தமிழக அரசு பொறுப்புடன் செயல்படவில்லை. 

தமிழக அரசு இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். 

தமிழக ஆளுநர் அவர்கள் சென்ற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVASAN statement on governor vehichels attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->