கர்நாடக காங்கிரஸாரின் பாத யாத்திரை.. தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் - தாமாக தலைவர் ஜிகே வாசன்..! - Seithipunal
Seithipunal


மேகதாதுவில் அணைக்கட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடாக மாநில காங்கிரஸார் பாத யாத்திரி மேற்கொள்வது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

வளர்ச்சிக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் செழிப்பிற்கும், உயர்விற்கும் காலம் காலமாக காவிரியையே நம்பி இருக்கிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாட்கள் பாதயாத்திரை நடத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.



காவிரி நீர் பிரச்சினை, தமிழகத்தின் பயிர் பிரச்சினையல்ல உயிர் பிரச்சினை. கர்நாடகா காங்கிரசாரின் இந்த செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டது, மிகவும் கண்டிக்கதக்கது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுவே தமிழக டெல்டா பகுதி மற்றும் அனைத்து விவசாயிகளுடைய எண்ணங்களும், கோரிக்கைகளும் ஆகும். இவ்வாறு  அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan statement about karnataka congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->