நான் உதவி கேட்ட போது நீங்க ஏன் அமைதியாக இருந்தீங்க.? கேள்வி எழுப்பும் காயத்ரி ரகுராம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் பொழுது திமுக தலைமை நிலை பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவை ஆபாச வார்த்தைகளைக் கொண்டு அவதூறாக பேசியிருந்தார்.

இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு திமுக தலைவர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்ததோடு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அக்கட்சியில் இருந்து நீக்கியதோடு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்களுக்கு நடந்தது தவறு என்றால் எனக்கு நடந்தது தவறு தான். ஆனால் நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? அண்ணாமலையும் அவருடைய வார்ரூம் என்பதால் அமைதியாக இருந்தீர்களா? 

நீங்கள் மற்றவரின் பிரச்சனையில் அமைதியாக இருந்ததால் உங்களுக்கு யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் நடந்தது எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. மற்றவர்களுக்காக பேசுங்கள். நான் உதவி கேட்டு கத்தியபோது, நீங்கள் அனைவரும் உங்கள் கட்சி பதவிக்காக அமைதியாக இருந்தீர்கள். டெய்சிக்கு வார்த்தைப் பிரயோகம், மிரட்டல் வந்ததும், நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பல பெண்கள் பாஜக காரியகர்த்தாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? இப்போது வரை பல வக்கிரங்கள் கட்சியில் அதிகாரத்துடன் சுதந்திரமாக அலைந்து, சில பெரிய பதவிகளில் உள்ளனர். வக்கிரங்கள் அதிகம் உள்ள உங்கள் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அவர்கள் என்னை எப்படி வாய்மொழியாக பாலியல் துன்புறுத்துகிறார்கள் என்பதை எனது கருத்துகளுக்கு கீழே பாருங்கள்.இப்போது அண்ணாமலை உங்களுக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவார், ஆனால் நீங்கள் இல்லாமல் (அவரது பிரவுனிபாயிண்ட்டுகளுக்காக) கடந்த முறை போல் நடத்துவார். அவர் உங்களை எப்படி பாதுகாப்பார்? அவரே கரூர் பெண் மற்றும் இரண்டு சகோதரர்கள் பற்றி கேமரா முன் தவறாக பேசினார். 

உங்களை காப்பாற்றுங்கள் உங்களுக்காக போராடுங்கள் என்பது எனது அறிவுரை. ஒரு பெண்ணாக நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் ஒரு NCW உறுப்பினர், நீங்கள் ஏன் இன்னும் ட்விட்டரில் உதவிக்காக அழுகிறீர்கள்? போலீஸ் உதவியுடன் அவரை வெளியே இழுத்துச் செல்லுங்கள். NCW இல் இருக்கும் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் மற்றவர்கள் எப்படி?" என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri asked Khushbu why you were silent when I asked for help


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->