காவல் நிலைய எலியால் கஞ்சா வியாபாரிகள் விடுதலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாட்டான் குப்பம் என்ற பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22.9 கிலோ கஞ்சா வைத்ததாக ராஜகோபால் மற்றும்  நாகேஸ்வரராவ் ஆகியோர் மெரினா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் இருந்து 50 கிராம் வீதம் 2 பாக்கெட்டைகள் ஆய்வக சோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையோடு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 11 கிலோ மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மெரினா காவல் நிலைய போலீசார் தாக்கல் செய்தனர். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 22.9 கிலோ கஞ்சாவில் 11 கிலோ எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமும் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதேபோன்று கடந்த ஜனவரி 8ஆம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 19 கிலோ எலி சாப்பிட்டு விட்டதாக கூறி 11 கிலோவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால 2 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை காவல் நிலையங்களில் கஞ்சா தின்னும் எலிகள் அதிகம் இருப்பதால் காவல்துறையினர் முதலில் கஞ்சா தின்னும் எலிகளை பிடிக்க வேண்டும் என இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganja saleaer freed after rats ate ganja in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->