"ஆன்லைன் உணவு டெலிவரி போல கஞ்சா டெலிவரி" - சென்னையில் அரங்கேறிய சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவர் தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஆன்லைன் உணவு டெலிவரி மட்டுமின்றி கஞ்சா போன்ற போதை பொருட்களையும் தமிழ்ச்செல்வம் டெலிவரி செய்து வந்துள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மதுரவாயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஆலம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக சென்ற உணவு டெலிவரி செய்யும் நபர் நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் உணவு டெலிவரி செய்யும் பையில் ஒரு கிலோ கஞ்சா பிடிபட்டது.

இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்த ஆலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வம் கைது செய்யப்பட்டு மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வத்திடம் இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கிருந்து கஞ்சா பெறப்பட்டது, யாருக்கு டெலிவரி செய்ய கொண்டு செல்லப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு டெலிவரி செய்யும் நபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganja Delivery Like Online Food Delivery in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->