சென்னையை தொடர்ந்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட மாவட்டம் மற்றும் கட்டுப்பாடுகள்.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சென்னையில் கடந்த 19 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கி உள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை கடைகள் திறக்கப்படும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lock down in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->