விவசாயிகளுக்கு இலவச தோட்டக்கலை பயிற்சி.. முதலில் பதிவு செய்யும் 10  நபருக்கு மட்டுமே..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு வழிகாட்டுதலின் படி தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டில், நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

தோட்டக்கலைத்துறை மூலமாக இந்தாண்டு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட  பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30 நாட்கள் நடைபெறுவதால்,  நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் இப்பயிற்சியில் பயன்பெறலாம். வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கு கலந்துக்கொள்வோருக்கு வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டு 30 நாட்களுக்கான போக்குவரத்து செலவாக, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பெண்கள் ,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும்.

 இப்பயிற்சியானது முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் நாளை 26ந் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free horticulture training for farmers..only for first 10 people to register..!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->