மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின்  முன்னாள் முதலமைச்சரான  ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்  வெளியிட்ட அறிக்கையில், "ஓம்" என்னும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடவுளாய் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' நல்வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்; அதன் மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும். 

இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டடும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது 'விநாயகர் சதுர்த்தி' திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். எனேவ அந்த அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Chief Minister O. Panneerselvam congratulated the people on Vinayagar Chaturthi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->