"உடும்பு ரத்தம் அமோக விற்பனை"- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உடும்பு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

போச்சம்பள்ளி பகுதி மக்களிடையே உடும்பு ரத்தத்தை குடித்தால் உடல் வலிமை, ஆண்மை அதிகரிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் உடும்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அழிந்து வரும் உயிரினும் மட்டுமல்லாது அறிய வகை உயிரினமான உடும்பை வேட்டையாட தடை உள்ள நிலையில் வியாபார நோக்கில் சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக உடும்பு இனமே அழியும் தருவாயில் உள்ளது. பிறரின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி உடும்பை வேட்டையாடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest Department to take action against monitor lizard poachers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->