ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன் அனுப்பியது! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த சொர்க்கம் கோப்பை வனப்பகுதிக்கு அருகே தேனி தொகுதி எம்பியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகனமான ரவிந்திரநாத் அவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டமானது வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அதைச் சுற்றி மின்வெளி அமைத்துள்ளனர். 

இந்த நிலையில் மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்து. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர கதியில் பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே எரித்துள்ளனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் நிலத்தின் உரிமையாளரான தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்காமல். அந்த தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை வைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பாக ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்தினார்கள். மேலும் நிலத்தின் உரிமையாளர் ரவிந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவைச் சேர்ந்த தேனி மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வனத்துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணமாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர் . 

இதற்கு கைது நடவடிக்கைகள் மட்டுமே கூடாது, விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சார்பில் பதில கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மற்றும் மேலும் இரண்டு பேரும் இரண்டு வார காலத்திற்குள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேனி மாவட்ட வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் ரவீந்திரநாத் தவிர்தாலோ அல்லது விசாரணையில் சரியான விளக்கம் அளிக்கப்படாமல் இருந்தாலோ சபாநாயகரின் அனுமதி பெற்று ரவீந்திரநாத் கைது செய்யப்பட கூடும் என பரவலாக பேசப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest department sent summons to Ravindranath


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->