திருச்சி விமான நிலையத்தில் 9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் 9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.!!

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று திருச்சி விமான நிலையம். இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்த விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். 

அப்போது, பயணி ஒருவர் சந்தேகிக்கும் வகையில் இருந்துள்ளார். உடனே, அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான யுஏஇ திர்ஹாம்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு கரன்சியின் இந்திய ரூபாய் மதிப்பு 9 லட்சத்து 17 ஆயிரத்து 910 ஆகும். மேலும், அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து   தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foreign currency seized in trichy airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->