கடல் நீரில் திடீர் நிறமாற்றம்.! பல அரியவகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதில் மீனவர்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திடீர் என்று கடல் நீரில் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏராளமான அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ள காரணத்தால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் மண்டபம் கடல் பகுதியைச்சேர்ந்த குண்டுகால் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் கடலில் நிற மாற்றம் ஏற்பட்டு மஞ்சள் கலந்தது போல் இருப்பதையும் மீனவர்கள் கண்டு அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆரய்ச்சி மற்றும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் நீரின் மாதிரி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

சாதாரணமாக ஆற்றிலோ, குளத்திலோ தான் இது போல் மீன்கள் இறந்து மிதக்கும், அது அச்சத்தை ஏற்படுத்தாது. ஆனால் இந்த மாதிரியான ஆயிரக்கணக்கான மீன்கள் கடலில் இறந்து ஒதுங்குவது கிடையாது என்று கூறப்படுகிறது.

எனவே நடுக்கடலில் ரசாயன கலவை கலக்கப்பட்டதா அல்லது கடலில் வேறுமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது பரிசோதையின் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish death in rameshwaram sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->