சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! நொறுங்கி விழுந்த கட்டிடம்! - Seithipunal
Seithipunal


சிவகாசி மாவட்டம், அனுப்பங்குளம் என்ற பகுதியில் பட்டாசு ஆலை வெடித்து ஒரு அறையே தரைமட்டமானது.

சிவகாசி அனுப்பங்குள பகுதியில் வடிவேல் பட்டாசு ஆலை உள்ளது. இதன் உரிமையாளர் சிவகாசி காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ஆறுமுகச்சாமி (வயது 70). 

நாக்பூர் உரிமை கொண்ட இந்த பட்டாசு ஆலையில், 150க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்கின்றனர். பட்டாசு உற்பத்தி செய்வது அதை சேமித்து வைப்பது என கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட அறைகள் இந்த ஆலையில் உள்ளன.

நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த, அறையில் மருந்து கலவை வைக்கப்பட்டிருந்தது. திடிரென அந்த பகுதியில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம், நிகழ்வின் காரணமாக உராய்வு ஏற்பட்டு வெடிக்கும் நிலை உருவானது.

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் ஒரு அறை, இடிந்து தரைமட்டமானது. அந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் அனைவரும் டீ குடிக்க சென்றிருந்ததால் உயிர் தப்பினர். பட்டாசு ஆலை வேலையாட்கள், யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை என நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த, தீயணைப்புத் துறையினர் உடனே அங்கு விரைந்தனர். ‌மேலும் இந்த வெடி விபத்து குறித்து , போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire Crackers burst in sivakasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->