உரிய அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்கிற்கு "சீல்"... பெண் டாக்டர் சிறையில் அடைப்பு...! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கிளினிக் நடத்தி வந்த, பெண் டாக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் உரிய அனுமதியின்றி தனியார் கிளினிக் ஒன்று செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள், தனியார் கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா (30) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படித்திருந்த பிரியங்கா, இந்திய மருத்துவக் கழகத்தின் தேர்வு எழுதாமலும், கிளினிக் நடித்த உரிய அனுமதி பெறாமலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள், இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.nஇந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், உரிய அனுமதியின்றி கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரியங்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female doctor who ran a clinic without proper permission was jailed in Tiruppur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->