போதைப் பொருள் கடத்தல் - திமுக முன்னாள் நிர்வாகி "ஜாபர் சாதிக்" கைது.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பான போதை பொருள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லியில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் அளித்த தகவலின் பெயரில் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக செயலக அணி பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஏற்கனவே ஜாதி ஜாபர் சாதிக்கின் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள் சம்மனையும் ஒட்டி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex dmk cadre jaffar Sadiq arrested in drug case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->