தமிழகத்தில் கால்நடை மருந்துகளும் தட்டுப்பாடு! இதுதான் திராவிட மாநாடு ஆட்சியா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பருவ காலம் மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கு, கோழிகளுக்கும் மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு தேவையான மருந்துகள் போடப்படும். கால்நடைகளுக்கான மருந்து பொருட்களும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு மாநிலம் முழுதும் அனுப்பப்படும். 

ஆனால் இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை. குறிப்பாக மாடுகளுக்கு தேவையான மருந்துகளை இதுவரை வாங்காததால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்படவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும் வாயிலும் அம்மை நோய் தாக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான மாடுகள் தடுப்பூசி போடாததால் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு போது போட வேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும் ஆடுகளுக்கு போட வேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும் அந்த தடுப்பு மருந்தையே மாடுகளுக்கும் செலுத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

ஆறறிவு உள்ளவர்கள் மட்டுல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றிலும் அடிப்போம் என்ற குறிக்கோளோடு இந்த அரசின் முதல்வர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்யவில்லை கால்நடைக்குள் கொள்முதல் செய்வதில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?" என தனது அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்புகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS said veterinary drugs shortage in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->