5 மாவட்டத்தில் பொறியியல் தேர்வுகள் ரத்து - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்தக் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கனமழையால் ரயில், சேவை, விமான சேவை. பேருந்து சேவை என்று அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கான மறுத்தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engineering exam cancelled in fie districts for rain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->