இன்று முதல் நான்கு நாட்களுக்கு மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து.!! - Seithipunal
Seithipunal


இன்று முதல் நான்கு நாட்களுக்கு மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து.!!

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னையில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே இன்று முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*அதன்படி, சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு செல்லும் ரயில், இரவு 11.30 மணிக்கு ஆவடிக்கு செல்லும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு செல்லும் ரயில், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.  

*அதிகாலை 1.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு செல்லும் ரயில், அதிகாலை 4.45 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு புறப்படும் ரயில், அதிகாலை 5.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு புறப்படும் ரயில், அதிகாலை 5.40 மணிக்கு சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு புறப்படும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.  

*அதிகாலை 3.50 மணிக்கு ஆவடியில் இருந்து சென்டிரலுக்கு புறப்படும் ரெயில், அதிகாலை 4.15 மணிக்கு சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு புறப்படும் ரயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

*இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு செல்லும் மின்சார ரயில் இன்றும், 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

* அதிகாலை 3.50 மணிக்கு சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் ரயில் வரும் 14-ந்தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

*அதிகாலை 4.30 மணிக்கு சென்டிரலில் இருந்து  திருவள்ளூருக்கு செல்லும் ரயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric trains partially canceled for four days in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->