விடுமுறை விடுவதில் விதிமுறை - அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுகிறது. ஆனால், விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்னர் மழையின் தாக்கம் பெரிதாக இல்லை. இதனால், தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதாவது, பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் ஏழு வகையான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அதன் விவரம் இதோ. 

* அதிக கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது.

* விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும்.

* மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். 

* பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது. 

* விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். 

* விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department rules announce for holiday in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->