விவசாயிகளோடு, விவசாயியாய்.. எடப்பாடி வயலில் செய்த வேலை.! வைரலாக போட்டோ.!  - Seithipunal
Seithipunal


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூரில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் வயலில் இறங்கி கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றார். அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றதுடன் 23 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

அத்துடன் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அங்கே அமைக்கப்படும் என தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக சென்றவர் திருவாரூர் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது எம்ஜிஆரை போல நெற்பயிர்களை அவர்களுக்கு எடப்பாடி தொட்டு கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முதல்வராக இருந்தாலும் தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், டெல்டா மக்களின் உணர்வுகளுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருக்கிறது என்று அவர் அடிக்கடி கூறி வருவார். அதற்கு இந்த புகைப்படங்கள் சாட்சியாக அமைகின்றன. ஏற்கனவே, அரியர் மாணவர்களை பாஸ் செய்ய வைத்து இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள முதல்வர் தற்போது விவசாயிகளின் ஆதரவையும் பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy with thiruvarur farmers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->