சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம் நெஞ்சை பதற வைக்கிறது.. முதல்வர் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சார்ந்த சிறுமி ஜெயப்பிரியா (வயது 7). இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று மாயமாகியுள்ளார். இவரை காணாது தேடியலைந்த பெற்றோர் சிறுமி காணாததால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த நிலையில், சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேலும், சிறுமியின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளமும், அவரது ஆடைகள் கலைந்தும் இருந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் மாரியப்பன் மகன் ராஜா (வயது 25) என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியின் கொலைக்கான காரணம் தொடர்பாக, ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுமியின் மரணத்திற்கு தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த ட்விட் பதிவில், " புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy regret about Pudukkottai Arandangi child sexual abuse murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->