வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த எஸ்.ஐ மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி மீது தஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்த தென்னரசு தற்போது மதுரை மாநகரின் குற்றப்பிரிவு துணை ஆணையரின் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்

இந்த விசாரணையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பல்வேறு இடங்களில் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிய வந்தது. கடந்த 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்த தென்னரசு 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சிக்கிய சம்பவம் மதுரை போலீசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC registered case against SI who accumulated more assets


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->