குட்கா விற்பனை செய்த வடமாநில நபர் தப்பி ஓட்டம்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


ஈரோடு: சமத்துவபுரம் மேடு பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு தலைமை காவலர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சித்தோடு போலீசார், வடமாநில வாலிபர் ஒருவர் குடோனில் இருந்து மூட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிரடியாக குடோனுக்குள் நுழைந்த போது, அந்த வாலிபர் தப்பித்து ஓடிவிட்டார். 

பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா மூட்டைகள் இருப்பதும் அது சுமார் 1000 கிலோ குட்கா அதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என தெரியவந்தது. 

அதனை அடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில நபரை பற்றி விசாரணை நடத்திய போது, அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (வயது 35). இவர் கடந்த இரண்டு மாதமாக அந்த பகுதியில் பழைய துணிகள் வியாபாரம் செய்வதாக தெரிவித்து குடோனை வாடகைக்கு எடுத்து, பல்வேறு இடங்களில் இருந்து குட்காவை வாங்கி வந்து அதனை ஈரோடு முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து சித்தோடு போலீசார் தப்பி ஓடிய தலராமை மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குட்கா விற்பனையில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drugs seller north state youth fled


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->