சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான உச்சநீதிமன்றம் கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த ஸ்ரீமதி, பரதட்சக்கரவர்த்தி, விஜயகுமார், முஹம்மது ஷபிக் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகிய 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யுமாறு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா 5 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Draupadi Murmu order to appoint 5 permanent judges to ChennaiHC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->