ஆண் தேவதைகளான தந்தையர்களை போற்றுவோம்! டாக்டர் இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தன்னலம் கருதா ஆண் தேவதைகளான தந்தையர்களை போற்றுவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தந்தையர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "ஆயிரமாயிரம் அதிர்வுகளையும், பூகம்பங்களையும் தாங்கிக் கொண்டு விதைகளில் இருந்து துளிர்களை எடுத்து வளர வைக்கும் பூமியைப் போன்று தங்கள் வாழ்வின் துயரங்களையும், இடிகளையும் மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டு, தம் பிள்ளைகளின் வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் உழைப்பவர்கள் தான் தந்தையர்கள். 

அவர்கள் ஒளிரும் ஆடைகளையும், மின்னும் நகைகளையும் அணியத் தெரியாத மிரட்டலுடன் கூடிய அரவணைப்பை மட்டுமே தரத் தெரிந்த ஆண் தேவதைகள். அவர்களைப் போற்றுங்கள்... அவர்களை முன்னோடியாகக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


முதல்வர் முக ஸ்டாலினின் தந்தையர் தின வாழ்த்து செய்தியில், 
"உங்களால் கருவானேன்.
உங்களால் செதுக்கப்பட்டேன்.
நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.
நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்" என்று தெரிவித்துள்ளார்.


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "எந்தவொரு சூழலையும் எதிர்கொண்டு வாழ கற்றுக்கொடுத்து, கண்டிப்புடனும், அன்பார்ந்த தோழனாகவும் நல்வழிப்படுத்தும் ஆசானாகவும் இருந்து, தன் உயிர்மூச்சு உள்ளவரை நம்மை தோளிலும், மனதிலும் சுமக்கும் தந்தையர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்குவதுடன், அனைத்து தந்தையர்களுக்கும் உலக தந்தையர் தினம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish Fathers day 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->