மு.க ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?.. கணக்கு கூட தெரியல..! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அல்டிமேட் பேச்சு.! - Seithipunal
Seithipunal


மு.க ஸ்டாலினுக்கு கலைஞரின் மகன் என்பதை விட வேறென்ன தகுதி இருக்கிறது? என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " திமுகவினரே இந்த தேர்தலில் நமக்கு வாக்களிக்க இருக்கிறார்கள். நாம் விவசாயிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என பன்முகத்தில் இருக்கும் உங்களை நம்புகிறோம். எடப்பாடி பழனிச்சாமி விவசாயி. விவசாயி என்ற தகுதி மிகப்பெரியது. ஸ்டாலினுக்கு கலைஞரின் மகன் என்பதை தவிர ஒரு தகுதியும் இல்லை. எதிர்க்கட்சி தலைவராக அவர் என்ன பணியை செய்துள்ளார்?.. சட்டமன்றத்திற்கு சென்று சட்டையை கிழித்து வெளியே வருவார். 

தலைவர் என்றால் தகுதி, சரித்திரம், வரலாறு, விவசாயம், ஆளுமை என்று பல தகுதிகள் தெரியவேண்டும். ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்ன என்று தெரியுமா?.. எடப்பாடி பழனிச்சாமி பயிரை நாடுவார்.. மு.க ஸ்டாலின் எதையோ நாடுவார்.. மு.க ஸ்டாலின் சார்பு ஊடகங்கள், அவரை தலைநிமிர்த்தி காட்டுகிறது. ஆயிரம் பேரை வைத்து 2000 கோடி முதலீட்டில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திமுக என்றாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு. 

அவர்கள் மீண்டும் வந்தால் காய்ந்த மாடு, கம்பங்காட்டில் பாய்ந்த கதைதான். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வரமுடியாது. திமுக கூட்டணியில் உள்ளவர்களும், திமுகவினரும் அப்படிப்பட்டவர்கள். ஒரு இடம் காலியாக இருந்தால் உடனடியாக நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுகவினர் இறங்கிவிடுவார்கள். திமுக வந்துவிட்டால் எங்களை தொழில் செய்ய விடமாட்டார்கள் என்று பல தொழிலதிபர்கள் பயத்துடனே இருக்கிறார்கள் " என்று பேசினார்..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Question to DMK MK Stalin 26 March 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->