திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில், திமுக பிரமுகர் குடும்பத்தோடு கைது?.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்பேட்டை பகுதியை சார்ந்தவர் வானவராயன் (வயது 30). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் இந்து. இவர்களுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், இந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

வானவராயன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல பணம் வசூல் செய்ய செல்கையில், அங்குள்ள பூங்காவனத்தம்மன் கோவில் அருகே 9 பேர் கொண்ட கும்பல் இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வானவராயன் அங்கிருந்து தப்பி ஓடவே, விரட்டி சென்ற கும்பல் ஓடஓட வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வானவராயன் பலியாகியுள்ளார். இதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, உடனடியாக கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வானவராயனின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், வானவராயனுக்கும் - கவுதம்பேட்டையை சார்ந்த திமுக பிரமுகருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருவரும் அவ்வப்போது மோதிக்கொண்டும் வந்துள்ளனர். கடந்த வாரத்தில் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வானவராயன் தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. 

இதனால், வானவராயனின் உறவினர்கள் திமுக பிரமுகரின் வீட்டின் முன்புறத்தை சூறையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது. இது தொடர்பான பிரச்சனையில் வானவராயன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதால், திமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி, இவர்களின் கூட்டாளிகள் என 8 பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Supporter Murders AMMK Supporter in Tirupattur 16 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->