தி.மு.க. மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மூத்த தலைவருமாக இருப்பவர் ஆற்காடு வீராசாமி. 92 வயதான இவர் முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

நேற்று இவர் வீட்டில் இருக்கும்போது திடீரென வழுக்கி விழுந்ததில் அவரது தோள்பட்டை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவரால் எழுந்திரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஆற்காடு வீரசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும் முட நீக்கியல் மருத்துவர் விரைந்து வந்து ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Senior leader admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->