உதயநிதி பிரச்சார கூட்டத்திற்கு திருட்டு கரண்டு.. இப்பவே இப்படியா?.. டகால்டி சம்பவங்கள்.!! - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மின்விளக்குகளுக்கு திருட்டு கரண்டு எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக, திமுக கட்சி அதிதீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி, பிரசாந்த் கிஷோரின் ஐடி டீமுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளது. 

மேலும், கட்சியின் சார்பில் பல நட்சத்திர பேச்சாளர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு களமிறக்கியுள்ள நிலையில், அவர்களின் பேச்சு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் திட்டமிடப்பட்டு களமிறக்கப்பட்டு அரசியலில் குதித்த உதயநிதி ஸ்டாலின் காவல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து இருந்தார். 

2 ஜி வழக்கில் திகார் சிறை சென்று வந்த எம்.பி ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசுகிறார். திண்டுக்கல் லியோனியும் நானும் உங்களுக்கு சளைத்தலைவன் இல்லை என்று பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். 

இப்படியாக பல அவதூறு பேச்சுக்கள் மற்றும் விஷம பிரச்சாரங்கள் என தொடரும் நிலையில், திமுக கட்சிக்காரர்கள் உணவகத்திற்கு சாப்பிட சென்று சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்க மறுப்பு தெரிவித்து கடையை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றிருந்த இடத்தில், திருட்டு மின்சார இணைப்பு எடுத்து மின்விளக்குகளை ஜொலிக்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ள நிலையில், இப்பவே இப்படியிருந்தால் ஆட்சிக்கு வந்தால் நிலை என்னாகும் என்று மக்கள் மீண்டும் பீதியில் பதற தொடங்கியுள்ளனர். சிந்தித்து வாக்களிப்பீர்..

மேலும், திருட்டுத்தனமாக கரண்ட் சப்ளை கொடுக்கையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தங்கியிருந்தால், கட்டாயம் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Salem Udhayanidhi Election Campaign 2021 Electricity Robbery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->