#Breaking: அறிவாலயத்தில் குத்தாட்டம் போட்ட கொரோனா... திமுகவின் முக்கிய புள்ளியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த உடன் பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கிய காலகட்டத்தில், மக்களுக்காக நாங்களும் உதவி செய்வோம் என்று கூறி பிரச்சனை செய்து, நீதிமன்றம் வரை திமுக சென்றது. திமுகவின் ஆர்வம் மக்களை கவரும் வகையில் இருந்தாலும், உதவி செய்கிறோம் என்ற பெயரில் அரிசி மூடையை தூக்கி எரிந்தது தான் மிச்சம் என்ற அளவிற்கு நடவடிக்கை இருந்தது. விலகியிரு, வீட்டில் இரு.. என்று அரசு கூறிய காலத்திலேயே நீதிமன்றம் சென்ற நீதிமான்கள் பலரும் தங்களை  பாதுகாத்துக்கொள்ள வீட்டிற்குள் இருந்தனர். இதில் களப்பணியாற்றிய பலருக்கும் சோகமே மிஞ்சியிருந்தது.

சில இடங்களில் மக்களின் வாக்குகளை கவர பிரம்மாதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் வெற்று விளம்பரம் மட்டுமே மக்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில், திமுக தலைவரின் பேச்சை கேட்டு, அரசின் உத்தரவுகளை மதிக்காமல் களப்பணிக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

அரசு பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களே தங்களின் உடல் நலனை மக்களுக்காக கொடுக்கும் பொருட்டு உழைத்து வந்தாலும், உயிரின் மீது பயம் கொண்டே உழைத்து வந்தனர். இந்த நிலையில், வெட்டி பந்தாவிற்காக பல சித்து வேலைகள் புரிந்து, இன்று இணையத்தளம் வரையிலும் விளம்பரம் செய்து வரும் திமுகவில் மற்றொரு முக்கிய புள்ளிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RS Bharathi Test Positive Corona Virus 23 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->