அலார்ட் கொடுத்த ஸ்டாலின்.. உஷாராகும் உடன் பிறப்புகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசும், தன்னார்வலர்களும், பிற அரசியல் கட்சியினரும் என தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். 

கொரோனா நிவாரண களப்பணியில் ஈடுபட்டு இருந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் திமுக வட்டாரம் மட்டுமல்லாது தமிழக மக்களும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ கே.பழனிக்கு கொரோனா உறுதியாகி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதியாகியுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், " கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin twit about ADMK MLA K Palani corona positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->