குத்தகைக்கு விட்ட கடையை காலி செய்ய மறுத்த திமுகவின் உடன்பிறப்பு! தீக்குளிக்க முயன்ற கடை உரிமையாளர்! - Seithipunal
Seithipunal


ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் கடையின் சாவியை ஒப்படைக்க மறுக்கும் அதிகாரிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதியில் அஸ்கர் அலி என்பவரின் தந்தை, திமுக பிரமுகர் சித்திக் பாஷாவின் தந்தைக்கு கடையை குத்தகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் அஸ்கர் அலி குத்தகை பணத்தை திருப்பி தந்து கடையை காலி செய்ய சொல்லியுள்ளார். ஆனால் திமுக பிரமுகர் அந்த கடையை காலி செய்ய மறுத்ததாக தெரியவருகிறது.  

 அஸ்கர் அலி அளித்த புகார் மனுவின் மீதான் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடைக்கு சீல் வைக்க வந்துள்ளனர். அவர்களை சீல் வைக்க விடாமல் சித்திக் பாஷா தடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்கர் அலி திடீரென தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார். அதனை கண்ட காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.

வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடைக்கு சீல் வைத்துவிட்டு திமுகவினரின் அழுத்தம் காரணமாக சாவியை தன்னிடம் ஒப்படைக்காமல் சென்றுள்ளனர் என அஸ்கர் அலி குற்றம்சாட்டியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK member who refused to vacate the leased shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->