மதுரையில் பரபரப்பு.. திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர் போராட்டம்.!! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சியின் மேயராக திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் இந்திராணி இருந்து வருகிறார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் 79வது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த லக்சிகாஸ்ரீ இருந்து வருகிறார். இவருடைய வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர், ராமையா தெரு, ஓம்சக்தி கோவில் தெரு, சுந்தராஜ புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளகல் 6 மாதங்களாக சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஜீவாநகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை தலைதூக்கியதால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த முறையும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததை அடுத்து திமுக மேயர் இந்திராணியை கண்டித்தும், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், 79-வது வார்டில் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை ஜீவாநகர் மெயின்ரோடு சந்திப்பில் திமுக மாமன்ற உறுப்பினர் லக்சிகாஸ்ரீ தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திமுக பகுதி செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தை ஆளும் கட்சி பெண் கவுன்சிலர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மதுரை மாநகர திமுகவில் அதிகார போட்டியின் காரணமாக உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்பொழுது திமுக கவுன்சிலர் மாநகராட்சிக்கு எதிராக பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மதுரை திமுகவினர் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK councilor protest against Madurai DMK mayor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->