சென்னையில் திமுகவினர் அட்டூழியம்.!! முதியவரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிரீம்ஸ் ரோடு, சுகந்திரா நகர் பகுதியில் நடு ரோட்டில் திமுக பிரமுகர் மாணிக்கம் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், அந்த காரை கடக்க முயன்றபோது, லேசாக காரில் உரசியுள்ளார். அதை பார்த்த மாணிக்கத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் தட்டி கேட்டபோது, அநாகிரகமான முறையில் உடையை தூக்கி காட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். மாணிக்கத்தின் மனைவி செல்வி, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம்விளக்கு பகுதியின் கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது 

முதியவரை தலை, காது, முதுகுப் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளதால். நிலைகுழைந்து போன அவர், அங்கேயே விழுந்துவிட்டார். இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்த, அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும்  திமுக பிரமுகர் மாணிக்கம் மிரட்டியுள்ளனர். இதை வெளியில் தெரியப்படுத்தும் நோக்கத்தோடு வீடியோ எடுத்தேன் , உங்களுக்காகத்தான் வீடியோ எடுத்தேன். இப்போ என்னால வெளியேகூட வர முடியல என அந்த பெண் பயப்படுகிறார். 

இது குறித்து அவர் மகன் கூறியது  தந்தையை தாக்கியதோடு மட்டுமல்லாமல், காவல்நிலையத்துக்குச் சென்று எங்கள் மீதே அவர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட என் அப்பாவை அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். பிறகு என்ன நடந்தது எனக் கூறி அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தோம் ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்கள் சுதந்திரமாக தான் தெருவில் சுற்றி வருகின்றனர் என தெரிவித்தார் 
 

English Summary

dmk beat old man in chennai


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal