களமிறங்கியது திமுக - வெளியானது முக்கிய அறிவிப்பு.. சுற்றுபயண விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


நேற்று பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தின் போது எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

அதன் படி, 
தூத்துக்குடி - பிப்ரவரி 5 
கன்னியாகுமரி - பிப்ரவரி 6, 
மதுரை - பிப்ரவரி 7, 
தஞ்சாவூர் - பிப்ரவரி 8, 
சேலம் - பிப்ரவரி 9, 
கோயம்புத்தூர் - பிப்ரவரி 10, 
திருப்பூர் - பிப்ரவரி 11, 
ஓசூர் - பிப்ரவரி 16, 
வேலூர் - 17, 
ஆரணி - பிப்ரவரி 18, 
விழுப்புரம் - பிப்ரவரி 20
சென்னை - பிப்ரவரி 21, 22 ,23 உள்ளிட்ட தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி பேசியதாவது:- "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk annaounce election manifesto team programe date


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->