மத்திய மற்றும் மாநில அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்த கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆக்ஸிஜன் வாயு உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதோடு, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் கடந்த 2016 ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்கூடம், பெல் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்சனை காரணமாக செயல்படாமல் உள்ளதாகவும், அந்த ஆக்சிஜன் கூடத்தை மீண்டும் செயல்பட வைத்தால் நாள்தோறும் 400 சிலிண்டர் அளவுக்கு ஆக்சிஜனை பெறமுடியும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ள இந்த காலகட்டத்தில், பெல் நிறுவனத்தை மீண்டும் ஆக்சிஜன் தயாரிப்புக்கு பயன்படுத்தினால் மிகுந்த பயனளிக்கும்.   எனவே, மக்களின் நலன் கருதி திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் துவங்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk vijayakanth statement on apr 29


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->